சச்சினா...? கோலியா...? யார் சிறந்த வீரர் - கபில் தேவ் ருசிகர பதில்...!

சச்சின் - கோலி ஆகிய இருவரில் யார் சிறந்த வீரர் என்ற கேள்விக்கு கபில் தேவ் பதில் அளித்துள்ளார்.

Update: 2023-01-22 11:24 GMT

மும்பை,

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி கடந்த சில வருடங்களாக ரன் குவிக்க முடியாமல் தவித்து வந்தார். இதையடுத்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் சதம் அடித்ததன் மூலம் மீண்டும் தனது பழைய பார்முக்கு திரும்பிய கோலி தற்போது வங்கதேசம், இலங்கை அணிகளுக்கு எதிரான தொடரில் அடுத்தடுத்து சதம் அடித்து ஒருநாள் கிரிக்கெட்டில் உள்ளுரில் அதிக சதம் அடித்த சச்சினின் சாதனையை முறியடித்தார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த வீரர் சச்சின் டெண்டுல்கரா, விராட் கோலியா என்ற சர்ச்சை தற்போது எழுந்துள்ளது. இது குறித்து பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் இது குறித்து தனது கருத்தை கூறியுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய முன்னாள் வீரர் கப்பில் தேவ் கூறியதாவது,

அனைத்து தலைமுறையுமே ஒன்றுக்கு ஒன்று வளர்ந்து வருகிறது. தமது காலத்தில் கவாஸ்கர் சிறந்த வீரராக விளங்கி வந்தார். அதன்பிறகு, டிராவிட் ,சச்சின், ஷேவாக் போன்ற தலைமுறையினர் வந்து சாதித்தனர். தற்போது ரோகித் ,விராட் கோலி என சிறந்து விளங்குவதாக தெரிவித்துள்ளார்.

இனிவரும் காலங்களில் விராட் கோலியை விட சிறந்த பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ரன் குவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கபில்தேவ் கூறினார். தமக்கு சில வீரர்களிடமிருந்து சில பிடிக்கும் சில பிடிக்காது என்பதால் 11 வீரர்கள் விளையாடும் ஆட்டத்தில் ஒருவர் மற்றும் இருவரை சிறந்த வீரர் என்று தேர்வு செய்ய தாம் விரும்பவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் 100 சதங்கள் பதிவு செய்துள்ளார். சச்சினுக்கு அடுத்த படியாக விராட் கோலி 74 சதங்களை பதிவு செய்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்