விராட் கோலிக்கு அன்பு பரிசு வழங்கிய சச்சின்!

உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன.

Update: 2023-11-19 09:25 GMT

image courtesy; twitter/ @BCCI

அகமதாபாத்,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 5-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடர் இந்தியாவின் 10 நகரங்களில் நடந்தது. லீக் மற்றும் அரையிறுதி சுற்று முடிவில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

கிரிக்கெட் உலகமே ஆவலோடு எதிர்நோக்கும் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று விளையாடி வருகின்றன.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கு முன்பாக இந்திய வீரர் விராட் கோலிக்கு ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், தான் கடைசியாக விளையாடிய ஒருநாள் போட்டியில் அணிந்திருந்த ஜெர்சியில் கையெழுத்திட்டு அன்பு பரிசாக வழங்கியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்