'விராட் கோலியை விட ரோகித் சர்மாதான் சிறந்த கேப்டன்'- ஆஸி. முன்னாள் கேப்டன்

விராட் கோலியை விட ரோகித் சர்மாதான் சிறந்த கேப்டன் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

Update: 2023-10-17 10:27 GMT

புது டெல்லி,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3 ஆட்டங்களில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

இந்நிலையில் விராட் கோலியை விட கேப்டன்ஷிப்பில் ரோகித் சர்மா சிறந்த கேப்டனாக இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு;- "ரோகித் சர்மா மிகவும் அமைதியாக இருக்கிறார். குறிப்பாக பேட்டிங்கில் அழகாக விளையாடும் அவர் களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நிதானமாக இருக்கிறார். இந்திய அணியை அழுத்தம் நெருங்க விடாத அளவுக்கு பார்த்துக்கொள்கிறார். ஏனெனில் அதுதான் போட்டியின் மகத்தான தன்மையாகும். விராட் சற்று ஆக்ரோஷத்துடன் இருப்பவர். இருப்பினும் அதேபோன்ற குணம் கொண்ட ஒருவர் கேப்டன்ஷிப் அழுத்தத்தை சமாளிப்பதை சற்று கடினமாக கருதலாம். ஆனால் ரோகித் சர்மா அதில் நன்றாக இருக்கிறார். குறிப்பாக நல்ல மனிதராகவும் சிறந்த வீரராகவும் அவர் நீண்ட காலமாக இந்தியாவுக்கு செயல்பட்டு வருகிறார். தற்சமயத்தில் அவர் இந்தியாவின் கேப்டனாக சிறந்த வேலையை செய்து வருகிறார்" என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்