ஏபி டி வில்லியர்சின் உலக சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா..!!

உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் ரோகித் சர்மா 24 பந்துகளில் 40 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

Update: 2023-11-05 10:22 GMT

image courtesy; twitter/ @BCCI

கொல்கத்தா,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடக்கும் 37-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து பேட்டிங்கை துவக்கிய இந்தியாவுக்கு ரோகித் சர்மா வழக்கம் போல தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை அடித்து நொறுக்கி அபாரமான துவக்கத்தை கொடுக்க முயற்சித்தார்.

குறிப்பாக லுங்கி நிகிடி வீசிய 5வது ஓவரில் 4, 6, 0, 6 என அடுத்தடுத்த பவுண்டரிகளை பறக்க விட்டு ரசிகர்களை மகிழ்வித்த ரோகித் சர்மா அரை சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் ரபடா பந்துவீச்சில் 40 (24) ரன்களில் ஆட்டமிழந்தார். வெறும் 4.3 ஓவரில் இந்தியாவை 50 ரன்கள் தாண்ட உதவிய அவர் அபாரமான துவக்கத்தை கொடுத்து ஆட்டமிழந்தார் .

இந்த ஆட்டத்தில் அடித்த 2 சிக்சர்களையும் சேர்த்து இந்த வருடம் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா மொத்தம் 58 சிக்சர்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு வருடத்தில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற ஏபி டி வில்லியர்சின் உலக சாதனையை ரோகித் சர்மா சமன் செய்துள்ளார்.

அந்த பட்டியல் விவரம் பின்வருமாறு;-

1. ரோகித் சர்மா : 58* (2023) 1. ஏபி டி வில்லியர்ஸ் : 58 (2015)

2. கிறிஸ் கெயில் : 56 (2019)

3. ஷாஹித் அப்ரிடி : 48 (2002)

ரோகித் சர்மாவை தொடர்ந்து கில் 23 ரன்களில் மகாராஜ் சுழற்பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். சற்றுமுன் வரை இந்தியா 25 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்கள் அடித்துள்ளது. களத்தில் விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்