ரைலீ ரூசோவ் சிக்சர் மழை..! டெல்லி 213 ரன்கள் குவிப்பு

ரைலீ ரூசோவ் 82 ரன்கள் , பில் சால்ட் 26 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர்.

Update: 2023-05-17 15:43 GMT

தர்மசாலா,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. தர்மசாலாவில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் 64-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் தவான் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் , பிரித்வி ஷா களமிறங்கனர். தொடக்கத்தில் இருவரும் அதிரடி காட்டினர். சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்த இருவரும் தொடக்க விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்தனர்.

பின்னர் வார்னர் 46 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரைலீ ரூசோவ் அதிரடி காட்டினார். அவர் பந்துகளை, , பவுண்டரி சிக்சருக்கு பறக்க விட்டார் .

பிரித்வி ஷா , ரைலீ ரூசோவ் இருவரும் அரைசதம் அடித்தனர். ஷா 54 ரன்களில் ஆட்டமிழந்தார் . பின்னர் வந்த பில் சால்ட் அதிரடியாக விளையாடினார்.

இறுதியில் 20 ஓவர்களில் டெல்லி 2விக்கெட் இழப்பிற்கு 213ரன்கள் எடுத்தது. ரிலீ ரோசோவ் 82 ரன்கள் , பில் சால்ட் 26  ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்