ராணா , ரிங்கு சிங் அரைசதம்..! சென்னை அணியை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி

கொல்கத்தா அணி 6விக்கெட்டுகள் வித்தியசாத்தில் அபார வெற்றி பெற்றது.

Update: 2023-05-14 17:39 GMT

சென்னை,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.இதில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 61-வது லீக் ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், 2 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்சை சந்தித்தது .

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெயிக்வாட் ., டேவான் கான்வே களமிறங்கினர்.அடுத்து வந்த ரஹானே 16 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கான்வே 30 ரன்களுக்கு வெளியேறினார்.

பின்னர் வந்த ராயுடு 4 ரன்கள் , மொயீன் அலி 1ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.அடுத்து வந்த ஷிவம் துபே அதிரடி காட்டினார். அவர் 48 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் சென்னை விக்கெட் 6 இழப்பிற்கு 144ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணியில் சுனில் நரைன் , வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

தொடர்ந்து 145 ரன்கள் இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக மஹ்மதுல்லா குர்பாஸ் , ஜேசன் ராய் களமிறங்கினர்.

தொடக்கத்தில் குர்பாஸ் 1 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து வெங்கடேஷ் ஐயர் 9 ரன்கள் , ஜேசன் ராய் 12 ரன்கள் எடுத்து வெளியேறினர்.

தொடர்ந்து களமிறங்கிய ராணா , ரிங்கு சிங் இணைந்து சிறப்பாக விளையாடினர்.நிலைத்து ஆடி ரன்கள் குவித்த இருவரும் பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினர். கடைசிவரை அதிரடியாக விளையாடி இருவரும் அரைசதம் அடித்தனர்.

இறுதியில் 18. 3ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு கொல்கத்தா அணி 147ரன்கள் எடுத்தது. இதனால் கொல்கத்தா அணி 6  விக்கெட்டுகள் வித்தியசாத்தில் அபார வெற்றி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்