ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
ஜெய்ப்பூர்,
16-வது ஐபிஎல் சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் சீசனில் அடுத்த சுற்றுக்கு முன்னேற அனைத்து அணிகளும் தீவிரமாக விளையாடி வருகின்றன.
இதில் ஜெய்ப்பூரில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஐடன் மார்க்ராம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதுகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 5 தோல்வி கண்டுள்ளது. முதல் 5 ஆட்டங்களில் 4-ல் வெற்றியை சுவைத்த அந்த அணி அடுத்த 5 ஆட்டங்களில் 4-ல் தோல்வியை சந்தித்தது. முந்தைய 2 ஆட்டங்களில் மும்பை, குஜராத் அணிகளிடம் அடுத்தடுத்து வீழ்ந்த அந்த அணி நெருக்கடியில் தவிக்கிறது.
ஐதராபாத் அணி 9 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 6 தோல்வி கண்டுள்ளது. அந்த அணிக்கு இந்த ஆட்டம் வாழ்வா-சாவா போராட்டமாகும். ஏனெனில் எஞ்சிய லீக் ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற்றால் தான் அந்த அணி அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பு குறித்து நினைத்து பார்க்க முடியும்.
இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.