உலகக் கோப்பை போட்டி முடிந்ததும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமுக்கு திருமணம்

ஆசிய கோப்பை கிரிக்கெட் மற்றும் உலகக் கோப்பை போட்டிக்கு தன்னை தயார்படுத்தி வருகிறார்.

Update: 2023-08-15 22:15 GMT

லாகூர்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் உலகின் முன்னணி பேட்ஸ்மேனாக திகழ்கிறார். தற்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் மற்றும் உலகக் கோப்பை போட்டிக்கு தன்னை தயார்படுத்தி வருகிறார். இந்த நிலையில் 28 வயதான பாபர் அசாமுக்கும், அவரது உறவுக்கார பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நவ.19-ந்தேதி உலகக் கோப்பை போட்டி முடிகிறது. அதன் பிறகு டிசம்பர் மாதத்தில் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்று விளையாட உள்ளது. இதற்கு இடைப்பட்ட நாட்களில் பாபர் அசாம் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.

 

Tags:    

மேலும் செய்திகள்