" 1.3 லட்சம் ரசிகர்கள் கூட்டத்தை அமைதியாக்குவதே எங்கள் இலக்கு" - பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது.

Update: 2023-11-18 09:59 GMT

அகமதாபாத்,

10 அணிகள் கலந்து கொண்ட 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த தொடரின் லீக் சுற்றின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இதில் இந்திய அணி நியூசிலாந்தையும், ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி  குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது . நாளை மதியம் 2 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

இந்த நிலையில் போட்டிக்கு முன்பு ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் அளித்த பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை அளித்துள்ளார். அதன்படி, 1.3 லட்சம் இந்திய ரசிகர்களுக்கு மத்தியில் விளையாடுவது குறித்து பேசியுள்ளார்.

இது குறித்து பேசிய பேட் கம்மின்ஸ்,

நாளை வரப்போகிற ரசிகர்கள் கூட்டம் நிச்சயம் ஒரு சார்பு கொண்டதாகவே இருக்கப் போகிறது. ஆனால் 1.3 லட்சம் ரசிகர்கள் கூட்டத்தை அமைதியாக்குவதை விட திருப்திகரமான ஒன்று எதுவும் இருக்காது. நாளை எங்களின் இலக்கு அதுவாகத்தான் இருக்கும் எனக் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்