சென்னையில் நடக்கும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்று தீர்ந்தது

ஆன்லைனில் அனைத்து டிக்கெட்டும் விற்று தீர்ந்து விட்டதாக கிரிக்கெட் சங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

Update: 2023-03-13 21:57 GMT

சென்னை,

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள்இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் 3-வது ஆட்டம் வருகிற 22-ந்தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்கிறது.

இந்த போட்டிக்கான ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கியது. இதில் ரூ.1,500, ரூ.3,000 ஆகிய குறைந்த விலை டிக்கெட்டுகளை வாங்க ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டினர். ரூ.5,000, ரூ.6,000, ரூ.8,000, ரூ.10,000 ஆகிய விலைகளிலும் டிக்கெட் விற்கப்பட்டது.

ஆன்லைனில் அனைத்து டிக்கெட்டும் விற்று தீர்ந்து விட்டதாக கிரிக்கெட் சங்க வட்டாரங்கள் தெரிவித்தன. வருகிற 18-ந்தேதி சேப்பாக்கத்தில் உள்ள கவுண்ட்டரில் நேரடி டிக்கெட் விற்பனை காலை 11 மணிக்கு தொடங்குகிறது. கவுண்ட்டரில் ரூ.1,200 விலைக்கான டிக்கெட் மட்டும் கிடைக்கும்.

 

Tags:    

மேலும் செய்திகள்