இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு..! மீண்டும் அணிக்கு திரும்பிய மேக்ஸ்வெல்
மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ், ஆகியோர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார்கள்.
ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் இரு டெஸ்டில் இந்திய அணி வென்றுள்ளது.ஒருநாள் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஆஸ்திரேலிய ஒருநாள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ், ஆகியோர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார்கள்.
ஆஸ்திரேலிய அணி :
பேட் கம்மின்ஸ், ஷான் அபாட், ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்க்லிஷ், லபுஷேன், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஜை ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா