'ஓய்வு பெறும் எண்ணம் இல்லை' - இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்
இன்னும் சாதிக்கும் உத்வேகத்தில் இருப்பதாக ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.
லண்டன்,
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு வருகிற 30-ந்தேதி 41-வது வயது பிறக்கிறது. இதுவரை 182 டெஸ்டில் விளையாடி 689 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். ஆனால் நடப்பு ஆஷஸ் தொடரில் 3 டெஸ்டில் ஆடி 4 விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார். இதனால் இன்றைய கடைசி டெஸ்டுடன் அவர் ஓய்வு பெறலாம் என்று தகவல்கள் வெளியாகின.
இதனை மறுத்துள்ள ஆண்டர்சன்,'இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை. பயிற்சியாளர் மெக்கல்லமும், கேப்டன் பென் ஸ்டோக்சும் நான் அணியில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். நானும் இன்னும் சாதிக்கும் உத்வேகத்தில் தான் இருக்கிறேன். தொடர்ந்து எனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்த முயற்சிப்பேன். ஒவ்வொருவருக்கும் சறுக்கல் ஏற்படுவது இயல்பு தான். ஆனால் இது போன்ற பெரிய தொடரில் சிறப்பாக செயல்பட முடியாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது' என்று கூறியுள்ளார்.