அந்த வீரரை டோனி 'ரிமோட் கண்ட்ரோல்' போன்று பயன்படுத்துகிறார் - இந்திய முன்னாள் வீரர் புகழாரம்

அந்த வீரரை டோனி ‘ரிமோட் கண்ட்ரோல்’ போன்று பயன்படுத்துகிறார் என்று இந்திய முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-04-28 15:00 GMT

ஜெய்ப்பூர்,

ஐபிஎல் கிரிக்கெட்டில் ஜெய்ப்பூரில் நேற்று நடந்த லீக் ஆடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தது. 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 32 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியடைந்தது.

இந்நிலையில், ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சென்னை தோல்வியடைந்தது குறித்து இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முரளி கார்த்திக் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முரளி கார்த்திக் கூறுகையில், திக்சனாவுக்கு பதில் மிச்செல் சாண்ட்னர் களமிறக்கப்படவேண்டும். பதிரனா வேகப்பந்துவீச்சாளர். கடைசி ஓவர்களில் மதீஷா பதிரனா சிறப்பாக பந்துவீசுகிறார். டோனி தலைமையில் பதிரனா சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மதீஷா பதிரனாவை 'ரிமோட் கண்ட்ரோல்' போன்று டோனி பயன்படுத்துகிறார். டோனிக்கு எந்த நினைக்கிறோரோ அதை பதிரனா செய்கிறார். ஆகையால் பதிரனாவை நான் மாற்றமாட்டேன்.

சென்னை சூப்பர் கிங்சில் வேகப்பந்து வீச்சு எப்போது மோசமாக இருந்தது. ஆகாஷ் சிங் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கடந்த போட்டியில் தொடர்ந்து 4 ஓவர்களை அவர் வீசியுள்ளார். எந்த சூழ்நிலையிலும் எந்த பேட்ஸ்மேன்களுக்கு எதிராகவும் சாண்ட்னர் மிகவும் சிறப்பாக பந்துவீசுகிறார் என்று தொடக்கம் முதலே நான் கூறி வருகிறேன்.

பந்துவீச்சாளர்களில் சிறந்த பேட்ஸ்மேன் சாண்ட்னரை தவிர வேறு யாருமில்லை. அவர் மிகச்சிறந்த பீல்டர். ஆகையால் என்னைபொறுத்தவரை சாண்ட்னரை அணியில் சேர்க்கவேண்டும். ஆனால், போட்டியை டோனி வித்தியாசமாக பார்ப்பார்' என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்