இலங்கைக்கு எதிரான போட்டி: ஸ்ரேயஸ் அய்யர் வீசிய பந்தை ஆச்சரியமாக பார்த்த விராட்...வீடியோ....!
இலங்கைக்கு எதிரான போட்டியில் பேட்ஸ்மேன் ஸ்ரேயஸ் அய்யர் பந்து வீசினார்.
திருவனந்தபுரம்,
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியாவுக்கு எதிரான 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடரை பாண்ட்யா தலைமயிலான இளம் வீரர்கள் 2-1 என்ற கணக்கில் வென்று அசத்தினர்.
இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. அடுத்ததாக இரு அணிகள் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து இந்திய அணி நிர்ண்யிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் விராட், கில் ஆகியோரின் சதத்துடன் 5 விக்கெட் இழப்பிற்கு 390 ரன்கள் குவித்தது
இதையடுத்து 391 என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடியது. இமாலய இலக்கை துரத்திய இலங்கை அணி பேட்ஸ்மேன்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த இலங்கை அணி 22 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்தது.
வெறும் 73 ரன்களில் இலங்கை அணி சுருண்டது. இதன் மூலம் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் 3-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது.
இந்தப்போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்ரேயஸ் அய்யர் பந்து வீசினார். அவர் ஆட்டத்தின் 18 ஓவரை வீச வந்தார். அப்போது விராட் கோலி ஸ்லிப்பில் பீல்டிங் செய்தார். இந்நிலையில் 18 ஓவரின் முதல் பந்தை ஸ்ரேயஸ் வீசினார் ஆப் ஸ்பின்னாக சென்ற அந்த பந்து அதிகமான சுழன்றது. இதைப்பார்த்த விராட் கோலி வாயில் கை வைத்தபடி ஆச்சரியமாக பார்த்தார். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.