ஐபிஎல் வரலாற்றில் 2-வது அதிகபட்ச ரன்கள் குவித்து லக்னோ சாதனை...!

ஐபிஎல் வரலாற்றில் 2-வது அதிகபட்ச ரன்களை குவித்து லக்னோ சாதனை படைத்துள்ளது.

Update: 2023-04-28 16:09 GMT

மொஹாலி,

நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 38வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது.

இதையடுத்து, லக்னோ தொக்க வீரர்களாக கேப்டன் கேஎல் ராகுல், கெயில் மெயிஸ் களமிறங்கினர். கேஎல் ராகுல் 12 ரன்னில் அவுட் ஆனார். அடுத்துவந்த ஆயிஷ் பதோனியுடன் ஜோடி சேர்ந்த மெயிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

மெயிஸ் 24 பந்துகளில் 54 ரன்கள் குவித்து அவுட் ஆனார். பதோனி 24 பந்துகளில் 43 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அடுத்துவந்த மார்கஸ் ஸ்டாயினஸ் 40 பந்துகளில் 72 ரன்கள் குவித்தார். அடுத்துவந்த நிகோலஸ் பூரன் 19 பந்துகளில் 45 ரன்கள் குவித்தார்.

இறுதியில் லக்னோ 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் குவித்தது. ஐபிஎல் வரலாற்றில் 2-வது அதிகபட்ச ரன்களை குவித்து லக்னோ சாதனை படைத்துள்ளது. முன்னதாக ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிகபட்ச ரன்கள் குவித்த பட்டியலில் முதல் இடத்தில் பெங்களூரு உள்ளது.

2013ம் ஆண்டு புனே அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு 263 ரன்கள் குவித்தது. இந்த ரன் தான் ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணி அடித்த அதிகபட்ச ரன் ஆகும். இன்று நடந்த ஆட்டத்தில் லக்னோ 257 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணி எடுத்த 2-வது அதிகபட்ச ரன் என்ற சாதனையை லக்னோ படைத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்