அதிரடியில் மிரள வைத்த லிவிங்ஸ்டன் - ஜிதேஷ் ஷர்மா..! பஞ்சாப் 214ரன்கள் குவிப்பு

லிவிங்ஸ்டன் 82 ரன்களும் , ஜிதேஷ் ஷர்மா 49 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

Update: 2023-05-03 15:45 GMT

மொஹாலி ,

ஐ.பி.எல். கிரிக்கெட் 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்று முக்கியமான கட்டத்தை நெருங்குகிறது. இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்சும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்சும் மோதுகின்றன

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் , பிரபசிம்ரான் சிங் களமிறங்கினர். தொடக்கத்தில் பிரபசிம்ரான் 9 ரன்களில் வெளியேறினார்.பின்னர் தவான் , மேத்யூ ஷார்ட் இணைந்து நிலைத்து ஆடினர். தொடர்ந்து தவான் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் , மேத்யூ ஷார்ட் 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டன் , ஜிதேஷ் ஷர்மா இணைந்து அதிரடி காட்டினர். பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டனர்.

லிவிங்ஸ்டன் 32பந்துகளில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய லிவிங்ஸ்டன் மும்பை அணியின் ஆர்ச்சர் வீசிய ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் பறக்க விட்டார் .

இறுதியில் 20 ஓவர்களுக்கு 3விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது. லிவிங்ஸ்டன் 82 ரன்களும் , ஜிதேஷ் ஷர்மா 49 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

தொடர்ந்து215 ரன்கள் இலக்குடன் மும்பை அணி விளையாடுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்