டி20 தொடரை கைப்பற்றப்போவது யார்? - கடைசி போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
லாடெர்ஹில்,
இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் நகரில் நேற்று இரவு நடந்தது. இதில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரில் 2-2 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது.
இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் இன்று நடக்கிறது.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி டி20 தொடரை கைப்பற்றும் என்பதால் இன்றைய இறுதி ஆட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இந்திய அணி :
யஷஸ்வி ஜெய்ஸ்வால் , சுப்மன் கில் , சூர்யகுமார் யாதவ் , திலக் வர்மா ,ஹர்திக் பாண்டியா (கேப்டன்) ,சஞ்சு சாம்சன் ,அக்சர் படேல் ,குல்தீப் யாதவ் ,யுஸ்வேந்திர சாஹல் ,அர்ஷ்தீப் சிங் ,முகேஷ் குமார்
வெஸ்ட் இண்டீஸ் அணி :
கைல் மேயர்ஸ் ,பிராண்டன் கிங், ஷாய் ஹோப் , நிக்கோலஸ் பூரன் ,ரோவ்மேன் பவல் (கேப்டன்) ,ஷிம்ரோன் ஹெட்மையர் ,ரோஸ்டன் சேஸ் ,ரொமாரியோ ஷெப்பர்ட் ,ஜேசன் ஹோல்டர் ,அகேல் ஹொசின் ,அல்சாரி ஜோசப்