கடைசி டி20 : இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் நாளை மோதல்
கடைசி டி20 போட்டி பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நாளை நடக்கிறது.
பெங்களூரு,
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிவிட்டது.
இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நாளை (17-ந் தேதி) நடக்கிறது. இந்த ஆட்டத்திலும் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றும் வேட்கையில் இந்தியா உள்ளது.
இப்ராகிம் சர்தான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்போர்ட்ஸ்-18 சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.