ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20; தென் ஆப்பிரிக்கா 190 ரன்கள் குவிப்பு

3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது

Update: 2023-09-03 14:04 GMT

கேப்டவுன்,

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடந்த முதலாவது மற்றும் 2-வது டி20 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. 

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது.டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரீசா ஹென்ட்ரிக்ஸ் 42 ரன்களும் , டோனோவன் பெரேரா 48 ரன்களும் எடுத்தனர்.

ஆஸ்திரேலியா சார்பில் சீன் அபோட் 4 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 191 ரன்கள் இலக்குடன் ஆஸ்திரேலியா அணி விளையாடுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்