சிக்சர் மழை பொழிந்த கைல் மேயர்ஸ்....லக்னோ 193 ரன்கள் குவிப்பு...!

இன்றைய லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

Update: 2023-04-01 15:50 GMT

Image Courtesy: AFP

லக்னோ,

16வது ஐபிஎல் சீசனின் இன்றைய லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் கைல் மேயர்ஸ் ஆகியோர் களம் இறங்கினர்.

இதில் கே.எல்.ராகுல் 8 ரன்னில் வீழ்ந்தார். இதையடுத்து மேயர்ஸ் உடன் தீபக் ஹூடா இணைந்தார். அதிரடியில் மிரட்டிய மேயர்ஸ் 38 பந்தில் 73 ரன்கள் குவித்த நிலையில் அவுட் ஆனார். மறுமுனையில் தீபக் ஹூடா 17 ரன்னிலும், மார்கஸ் ஸ்டோய்னிஸ் 12 ரன்னிலும் வீழ்ந்தனர். இதையடுத்து குருனால் பாண்ட்யா, நிக்கோலஸ் பூரன் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர்.

இதில் அதிரடியில் மிரட்டிய 21 பந்தில் 36 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து பாண்ட்யாவுடன் ஆயுஷ் பதோனி ஜோடி சேர்ந்தார். இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது.

லக்னோ தரப்பில் கைல் மேயர்ஸ் 38 பந்தில் 73 ரன்னும், பூரன் 21 பந்தில் 36 ரன்னும், ஆயுஷ் பதோனி 7 பந்தில் 18 ரன்னும் எடுத்தனர். இதையடுத்து 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி ஆட உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்