தமிழக கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக குல்கர்னி நியமனம்
தமிழக கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக குல்கர்னி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு சீனியர் ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் முதல் தர கிரிக்கெட் வீரரான 56 வயது சுலக்ஷன் குல்கர்னி நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரை கிரிக்கெட் கமிட்டியின் பரிந்துரையின் பேரில் 2023-24 மற்றும் 2024-25-ம் ஆண்டு சீசனுக்கான தமிழக அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்க தமிழ்நாடு கிரிக்கெட் சங்க உயர்மட்ட கமிட்டி கூட்டத்தில் நேற்று முடிவு எடுக்கப்பட்டது என்று அதன் செயலாளர் ஆர்.ஐ.பழனி தெரிவித்துள்ளார். சுலக்ஷன் குல்கர்னி மும்பை, விதர்பா அணிகளின் பயிற்சியாளராக பணியாற்றி இருக்கிறார்.