குர்பாஸ், ரசல் அதிரடி: கொல்கத்தா 179 ரன்கள் குவிப்பு...!

குஜராத்திற்கு எதிரான போட்டியில் கொல்கத்தா 179 ரன்கள் குவித்துள்ளது.

Update: 2023-04-29 12:33 GMT

கொல்கத்தா,

ஐபிஎல் தொடரில் 39வது லீக் ஆட்டத்தில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் மோதுகின்றன. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து, கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக ஜெகதீசன், ரஹமதுல்லா குர்பாஸ் களமிறங்கினர். ஜெகதீசன் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஷமி பந்து வீச்சில் அவுட் ஆனார். அடுத்துவந்த ஷர்துல் தாக்கூர் ரன் எதுவும் எடுக்காமல் (0) அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

பின்னர் களமிறங்கிய வெங்கடேஷ் 11 ரன்னிலும், கேப்டன் நிதிஷ் ரானா 4 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினார். விக்கெட்டுகள் தொடர்ந்து சரிந்த நிலையில் தொடக்க வீரரான குர்பாஸ் நிலைத்து நின்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

குஜராத் பந்துவீச்சாளர்களின் பந்தை நாளா பக்கமும் சிக்சர்களாக சிதறடித்த குர்பாஸ் அதிரடி ஆட்டத்தை ஆடினார். 39 பந்துகளை சந்தித்த குர்பாஸ் 5 பவுண்டரி, 7 சிக்சர்கள் உள்பட 81 ரன்கள் குவித்து அவுட் ஆனார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ரசல் 19 பந்துகளில் 34 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.

இறுதியில் கொல்கத்தா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது. இதன் மூலம் குஜராத் வெற்றிபெற 180 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குஜராத் தரப்பில் அந்த அணியின் முகமது ஷமி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்