சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா பந்துவீச்சு தேர்வு
டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
கொல்கத்தா,
16வது ஐபிஎல் தொடரில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் நிதிஸ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.