அறிமுக போட்டியிலேயே சதமடித்து ஜெய்ஸ்வால் அசத்தல்..!

அறிமுக போட்டியிலேயே சதமடித்து ஜெய்ஸ்வால் சாதனை படைத்துள்ளார்.

Update: 2023-07-13 17:59 GMT

டொமினிகா,

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டொமினிகாவில் உள்ள வின்ட்சர் பார்க் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்து ஆட்டமிழந்தது. இதனை தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், ஜெய்ஸ்வாலும் களமிறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இவர்களை பிரிக்க வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்கள் பல்வேறு யுக்தியை பயன்படுத்தியும், பலனளிக்கவில்லை.

குறிப்பாக தனது அறிமுக போட்டியிலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த ஜெய்ஸ்வால், 215 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த 17வது இந்திய வீரர் என்ற பெருமையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார். 

தொடர்ந்து அவர் விளையாடி வருகிறார். அவருடன் கேப்டன் ரோகித் சர்மா 91 ரன்களுடன் தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்திய அணி 71 ஓவர்களில் விக்கெட் இழப்பின்ற 213 ரன்கள் எடுத்து 63 ரன்கள் முன்னிலையுடன் விளையாடி வருகிறது.

 

 

Tags:    

மேலும் செய்திகள்