இந்திய ஒருநாள் போட்டி அணியில் ஆடும் லெவனில் இவர் இடம் பெறாதது ஆச்சரியமாக உள்ளது - இலங்கை முன்னாள் கேப்டன்

இந்திய ஒருநாள் போட்டி அணியில் ஆடும் லெவனில் இவர் இடம் பெறாதது ஆச்சரியமாக உள்ளது என இலங்கை முன்னாள் கேப்டன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-01-14 01:22 GMT

Image Courtesy: surya_14kumar

கொழும்பு,

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தினேஷ் சன்டிமால் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது,

'இந்திய ஒரு நாள் போட்டி அணியில் அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவை களம் இறக்காமல் வெளியே உட்கார வைத்திருப்பது எனக்கே ஆச்சரியமாக உள்ளது. இது இந்திய அணி எந்த அளவுக்கு வலுமிக்கதாக இருக்கிறது என்பதை காட்டுகிறது.

ஆனாலும் தற்போதைய இந்திய அணியில் மிடில் வரிசையில் சூர்யகுமார் யாதவால் இடம் பெற முடியும் என்று நினைக்கிறேன். மற்ற பேட்ஸ்மேன்களிடம் இருந்து சூர்யகுமார் யாதவ் வித்தியாசமானவர்.

அவரை போன்ற வீரர்கள் மிடில் வரிசைக்கு தேவையாகும். 30 முதல் 50 ரன்களை வேகமாக எடுத்து ஆட்டத்தின் போக்கையே மாற்றி விடுவார்கள்'.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் இந்திய டி20 அணியில் இடம் பெற்று இதுவரை 3 அதிரடி சதங்களை அடித்துள்ளார். இவரது அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி பல்வேறு போட்டிகளில் வெற்றிக்கனியை பறித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்