ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறீர்களா...? ரசிகரின் கேள்விக்கு டோனியின் பதில்...!

டோனியிடம் நீங்கள் ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறீர்களா...? என ரசிகர் கேள்வி கேட்டார்.

Update: 2023-04-17 13:40 GMT

சென்னை,

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் 4 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிகள் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.

இதனிடையே, நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி அவ்வப்போது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதேவேளை, நடப்பு ஐபிஎல் தொடர் தான் டோனியின் கடைசி ஐபிஎல் தொடர் என்று வதந்திகள் அவ்வப்போது வந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்புடைய விளம்பர நிகழ்ச்சியில் சென்னை கேப்டன் டோனி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரசிகர் ஒருவர், டோனியிடம் ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறீர்களா...? ஓய்வுக்கான உங்கள் திட்டம் என்ன? என்று கேள்வி எழுப்பினார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எப்போது என்பது குறித்த ரசிகரின் கேள்விக்கு டோனி அளித்த பதில் ரசிகர்களிடம் ஆரவாரத்தை ஏற்படுத்தியது.

ஓய்வு குறித்த கேள்விக்கு டோனி அளித்த பதில், ஓய்வு குறித்து முடிவெடுக்க இன்னும் நிறைய காலம் உள்ளது. எங்களுக்கு இன்னும் நிறைய ஆட்டங்கள் உள்ளன. நான் எதாவது கூறினால் பயிற்சியாளர் (சென்னை பயிற்சியாளர் பிளமிங்) அழுத்தத்தை சந்திப்பார்' என்றார்.   

Tags:    

மேலும் செய்திகள்