இன்று முதல் ஐ.பி.எல் டிக்கெட்டுகள் விற்பனை - சேப்பாக்கம் மைதானத்தில் குவிந்த ரசிகர்கள்

சென்னையில் நடக்கும் ஐ.பி.எல் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது.

Update: 2023-03-27 01:52 GMT

சென்னை,

இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் வருகிற 31-ந் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இந்த தொடருக்காக தற்போது அனைத்து அணிகளை சேர்ந்த வீரர்களும் தயாராகி வருகின்றனர்.

இந்த தொடரின் முதல் போட்டியாக குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்திற்கு திரும்பி உள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்து உள்ளனர்.

இந்த நிலையில், சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்க அதிகாலையிலேயே சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். சென்னையில் 7 லீக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், ரூ.1,500 முதல் ரூ.3,000 வரை டிக்கெட்டுகள் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை PAYTM மற்றும் www.insider.in மற்றும் சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள இரண்டு கவுண்டர்களில் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்