ஐபிஎல் கிரிக்கெட் - மீண்டும் விசில் போடு எக்ஸ்பிரஸ் இயக்கம்

சென்னையில் வரும் 30-ம் தேதி சிஎஸ்கே- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

Update: 2023-04-14 01:39 GMT

சென்னை,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 18 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளது. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜியான்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் முன்னிலையில் உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்ற 2 போட்டிகளில் தோல்வியடைந்து 4 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், சென்னையில் வரும் 30-ம் தேதி சிஎஸ்கே- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டியை இலவசமாக காண குமரி முதல் சென்னை வரை மீண்டும் விசில் போடு எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. குமரி, நெல்லை, மதுரை, திண்டுக்கல், திருச்சியை சேர்ந்த 750 ரசிகர்களுக்கான அனைத்து செலவும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும், இதற்காக ஏப்ரல் 14-ம் தேதி (இன்று) முதல் www.chennaisuperkings.com/wgistlepoduexpress/#/ என்ற இணையதளத்தில் ரசிகர்கள் பதிவு செய்யலாம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்