ஐ.பி.எல் கிரிக்கெட்: பெங்களூரு - ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்

ஐ.பி.எல் கிரிக்கெட்டின் இன்றைய போட்டியில் பெங்களூரு - ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

Update: 2023-04-23 01:55 GMT

பெங்களூரு,

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த கிரிக்கெட் திருவிழாவில் பெங்களூரு, சின்னசாமி மைதானத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 32-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதுகிறது.

இந்த சீசனில் இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணி அதில் 4-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டு புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. பெங்களூரு அணியை எடுத்துக் கொண்டால், 6 ஆட்டங்களில் ஆடி 3-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும் கண்டு 6-வது இடத்தில் இருக்கிறது.

ஆதிக்கத்தை தொடர இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

Tags:    

மேலும் செய்திகள்