ஐபிஎல் 2023: மும்பை அணி வீரர்களுக்கு பயிற்சி வழங்கிய பொல்லார்ட்- வைரல் வீடியோ
அந்த வீடியோவில் அணி வீரர்களுக்கு பேட்டிங் குறித்து சில ஆலோசனைகளை வழங்கினார்
இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரின் இந்த ஆண்டுக்கான 16-வது சீசன் வரும் 31 ஆம் தேதி துவங்க உள்ளது. இந்த தொடருக்காக தற்போது அனைத்து அணிகளை சேர்ந்த வீரர்களும் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பொல்லார்ட் அணியுடன் இணைந்து வீரர்களுக்கு ஆலோசனை வழங்கிய வீடியோவை மும்பை அணி அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
அந்த வீடியோவில் அணி வீரர்களுக்கு பேட்டிங் குறித்து சில ஆலோசனைகளை வழங்கினார். மேலும் பொல்லார்ட் உடன் அணியின் உரிமையாளரான ஆகாஷ் அம்பானி பயிற்சி குறித்து கேட்டறிந்தார்.