ஐபிஎல் 2023 - கொல்கத்தா அணியின் ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் விலகல்
கொல்கத்தா அணியின் ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
கொல்கத்தா ,
16வது ஐபிஎல் சீசன் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த முறை உள்ளூர், வெளியூர் அடிப்படையில் போட்டிகள் நடைபெறுவதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
இந்த நிலையில் கொல்கத்தா அணியின் ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
சர்வதேச போட்டிகள் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக ஷகிப் அல் ஹசன் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 36 வயதாகும் ஷகிபை கொல்கத்தா அணி நிர்வாகம் சமீபத்தில் நடந்த ஏலத்தில் ரூ. 1.50 கோடிக்கு எடுத்தது.