ஐபிஎல் 2023 : தீவிர பயிற்சியில் சென்னை அணி வீரர்கள்

இதற்கான வீடியோவை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

Update: 2023-03-07 01:32 GMT

சென்னை,

10 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்பட 12 நகரங்களில் வருகிற 31-ந் தேதி முதல் மே 28-ந் தேதி வரை நடக்கிறது. ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அரங்கேறும் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ்-4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் போட்டிக்காக சென்னைக்கு வந்துள்ள தோனி, ரஹானே , ஷிவம் துபே, அம்பத்தி ராயுடு,உள்ளிட்ட இதர சென்னை அணி வீரர்களும் தங்களுடைய பயிற்சியை ஆரம்பித்துள்ளார்கள்.இதற்கான வீடியோவை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்