ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 13 ஆயிரம் ரன்களை கடந்து இந்திய வீரர் விராட் கோலி சாதனை

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 13 ஆயிரம் ரன்களை கடந்து இந்திய வீரர் விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.

Update: 2023-09-11 13:44 GMT

image courtesy: BCCI twitter

கொழும்பு,

இலங்கை தலைநகர் கொழும்பில் இன்று நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்4 சுற்று 3-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 356 ரன்கள் குவித்தது.

இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய விராட் கோலி ஆட்டமிழக்காமல் 94 பந்துகளில் 122 ரன்கள் (6 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) எடுத்தார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது 47-வது சதத்தை பதிவு செய்த அவர், 13,000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.

278 ஒருநாள் போட்டிகளில் 267 இன்னிங்ஸ் விளையாடி 13,000 ரன்களைக் கடந்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார். 13,000 ரன்களைக் கடந்த ஐந்தாவது வீரர் என்ற சாதனையை படைத்த அவர், அதிவேகமாக 13,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் சச்சினுக்கு அடுத்த இடத்தில் விராட் கோலி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்