இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் காவல் நிலையத்தில் புகார்...!!
இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை,
இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக். இவர் தமிழகத்தை சேர்ந்தவர். தற்போது வர்ணனையாளராகவும், ஐ.பி.எல்.-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காகவும் விளையாடி வருகிறார்.
இவருக்கு சொந்தமான வீடு ஒன்று சென்னை நீலாங்கரையை அடுத்த அக்கரையில் உள்ளது. இந்நிலையில் அந்த வீட்டின் அசல் ஆவணங்களை நகலெடுக்க எடுத்து சென்ற போது தொலைந்துவிட்டதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.