2023 உலகக்கோப்பை கிரிக்கெட்: கொல்கத்தா, மும்பை மைதானங்களில் அரையிறுதிப் போட்டிகள்..!!

2023 உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டிகள் கொல்கத்தா, மும்பை மைதானங்களில் நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2023-06-26 18:18 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

2023 உலகக்கோப்பை 50 ஒவர் கிரிக்கெட் இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடருக்கு இதுவரை இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.

உலகக்கோப்பை தொடரின் முதலாவது ஆட்டம் அக்டோபர் 5ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளதாகவும், அந்த போட்டியில் கடந்த உலகக்கோப்பையில் முதல் 2 இடங்களை பிடித்த இங்கிலாந்தும், நியூசிலாந்தும் மோத உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

மேலும் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சந்திக்கலாம் என்றும், அந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அக்டோபர் 15ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. உலககோப்பை தொடரின் இறுதிப்போட்டி நவம்பர் 19ம் தேதி அகமதாபாத்தில் நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டிகள் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மற்றும் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்