ஐசிசி டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசை : ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் முதலிடம்..!

20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டுள்ளது.

Update: 2023-03-29 12:06 GMT

துபாய்,

20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டுள்ளது. அதில் ஆப்கானிஸ்தான் சுழற் பந்துவீச்சாளர் ரஷித் கான் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

சமீபத்தில் நடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரை ஆப்கானிஸ்தான் அணி வென்றது. இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட ரஷித் கான் , ஹசரங்காவை பின்னுக்கு தள்ளி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இலங்கை வீரர் ஹசரங்கா 2வது இடத்திலும் , ஆப்கானிஸ்தான் அணியின் பசல்ஹக் பரூக்கி 3வது இடத்தில் உள்ளார்.

மேலும் தரவரிசையில் இந்திய வீரர்ககள் யாரும் டாப் 10 இடத்திற்குள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் அர்ஷிதீப் சிங் 14 வது இடம் , புவனேஷ்வர் குமார் 20 இடத்தில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்