நான் ஒருபோதும் இந்திய அணிக்காக இனி விளையாடப் போவதில்லை...அதனால்... - துலீப் டிராபியில் விளையாட மறுத்த முன்னணி வீரர்

நான் ஒருபோதும் இந்திய அணிக்காக இனி விளையாடப் போவதில்லை. அதனால் எனது இடத்தில் இளம் வீரர் விளையாடட்டும் என இந்திய முன்னணி வீரர் கூறியுள்ளார்.

Update: 2023-06-16 11:28 GMT

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி விக்கெட் கீப்பராக திகழ்ந்தவர் மகேந்திர சிங் தோனி. அவர் ஓய்வு பெற்ற பின்னர் இந்திய அணியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விருத்திமான் சஹாவும், ஒருநாள் மற்றும் டி 20 கிரிக்கெட்டில் ரிஷப் பந்தும் விக்கெட் கீப்பர்களாக செயல்பட்டனர்.

அதன் பின்னர் முன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் செயல்பட்டார். விருத்திமான் சஹாவுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருந்தது. இதனையடுத்து கடந்த ஆண்டு இறுதியில் ரிஷப் பந்துக்கு விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து இந்திய டெஸ்ட் அணியில் சஹாவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கே.எஸ்.பரத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆஸ்திரேலிய தொடர் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகியவற்றிலும் கே.எஸ்.பரத்துக்கே வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவில் வரும் 28-ம் தேதி நடப்பு ஆண்டுக்கான துலீப் டிராபி தொடர் தொடங்க உள்ளது.  இந்த தொடரில் தான் பங்கேற்கப் போவதில்லை என விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான விருத்திமான் சாஹா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகவலை திரிபுரா அணியின் தேர்வாளர் ஜெயந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது,

நான் சாஹாவை தொடர்பு கொண்டேன். அவர் துலீப் டிராபியில் விளையாட மறுத்துவிட்டார். உள்நாட்டில் நடைபெறும் இந்த முதல் தர கிரிக்கெட் தொடர் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை வீரர்களுக்கு ஏற்படுத்தி தருகிறது.

ஆனால், நான் ஒருபோதும் இந்திய அணிக்காக இனி விளையாடப் போவதில்லை. அதனால் எனது இடத்தில் இளம் வீரர் விளையாடட்டும் என சொல்லிவிட்டார்.

இவ்வாறு ஜெயந்தா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்