லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் பேட்டிங் தேர்வு
டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் மார்க்ரம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்
ஐதராபாத்,
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கும் இந்த போட்டி தொடரில் இன்று (சனிக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. ஐதராபாத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கும் 58-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை எதிர்கொள்கிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் மார்க்ரம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.