இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் - ஆஸ்திரேலிய வீரர்களுக்கு முன்னாள் வீரர் அறிவுரை...!

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 9-ம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது.

Update: 2023-02-07 03:05 GMT

Image Courtesy: Cricket Australia twitter

மெல்போர்ன்,

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 9-ம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலிஸ்ட்டை தீர்மானிக்கும் டெஸ்ட் தொடர் என்பதால் இது மிக முக்கியமான டெஸ்ட் தொடர் ஆகும்.

கடைசியாக 2004-ம் ஆண்டு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணி அதன்பின்னர் 19 ஆண்டுகளாக டெஸ்ட் தொடரை வென்றதில்லை. இதற்கிடையே, இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் 2 முறை டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது.

இந்திய ஆடுகளங்கள் சுழல் பந்து வீச்சுக்கு சாதாகமாக இருக்கும் என்பதால் ஆஸ்திரேலிய அணி 4 சுழல் பந்து வீச்சாளர்களுடன் இந்தியாவிற்கு வந்துள்ளது. இந்திய ஆடுகளங்களில் அஷ்வின், ஜடேஜா, அக்சர் படேல் ஆகிய சுழல் பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது மிகச்சவாலான காரியம்.

இந்நிலையில் இந்தியாவில் சுழல் பந்து வீச்சை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று முன்னாள் ஜாம்பவான் ஷேன் வாட்சன் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஆலோசனை கூறியுள்ளார். இதுகுறித்து ஷேன் வாட்சன் கூறியதாவது:-

இந்தியாவில் சுழல் பந்தை ஸ்டிரைட் பேட்டில் ஆடவேண்டும். இந்திய வீரர்கள் கிராஸ் பேட் ஷாட் ஆடவே மாட்டார்கள். ஸ்டிரைட் பேட்டில் மட்டுமே ஆடுவார்கள். எனக்கும் ப்ரண்ட் பூட்டில் ஆடலாமா அல்லது பேக் பூட்டில் ஆடலாமா என்ற குழப்பம் இருந்தது. ஆனால் ஸ்டிரைட் பேட்டில் ஆடுவது தான் சரியான உத்தி.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்