என் வாழ்நாளில் அவரை முதிர்ந்த நபராக பார்க்கமாட்டேன் - சென்னை வீரர் குறித்து டோனி ருசிகர கருத்து

அவர் போதைப்பொருள் போன்றவர்... அங்கு இங்கு இல்லை என்றால் எங்கே உள்ளார் என்று நீங்கள் நினைப்பீர்கள்... என்று டோனி தெரிவித்தார்.

Update: 2023-07-11 11:19 GMT

சென்னை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நடத்திர வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனுமான டோனி அவரது மனைவி சாக்ஷி இணைந்து தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் என்ற திரைப்படத்தை தயாரித்து வருகின்றனர்.

இந்த திரைப்படத்தின் டிரெய்லர், இசை வெளியிட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் குறித்து ருசிகர கருத்து தெரிவித்துள்ளார்.

தீபக் சஹார் குறித்து டோனி கூறுகையில், தீபக் சஹார் போதைப்பொருள் போன்றவர். அவர் இங்கு இல்லையெனால் அவர் எங்கு உள்ளார் என்று நீங்கள் நினைப்பீர்கள். அவர் இங்கு இருந்தால் அவர் ஏன் இங்கு இருக்கிறார் என்று நினைப்பீர்கள். நல்ல விஷயம் என்னவென்றால் தீபக் சஹார் முதிர்ச்சியடைந்த நபராகி வருகிறார். ஆனால், அதற்கு சில காலம் தேவைப்படுகிறது. பிரச்சினை என்னவென்றால் எனது வாழ்நாளில் தீபக் சஹாரை முதிர்ந்த நபராக நான் பார்க்கமாட்டேன்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்