குஜராத் அபார பந்துவீச்சு...டெல்லி 162 ரன்கள் சேர்ப்பு...!

குஜராத் ஜெயண்ட்ஸ் தரப்பில் ரஷித் கான் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Update: 2023-04-04 15:55 GMT

Image Courtesy: @IPL

டெல்லி,

ஐபிஎல் தொடரில் இன்றைய லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - குஜராத் ஜெய்ண்ட்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதையடுத்து டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் களம் இறங்கினர்.

இதில் பிரித்வி ஷா 7 ரன், அடுத்து வந்த மிட்செல் மார்ஷ் 4 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆகினர். இருவரது விக்கெட்டுகளையும் முகமது ஷமி வீழ்த்தினார். இதையடுத்து வார்னருடன் சர்ப்ராஸ் கான் ஜோடி சேர்ந்தார். இதில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வார்னர் 37 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய அதிரடி ஆட்டக்காரர் ரீலி ரோசவ் முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

இதையடுத்து அபிஷேக் போரல் சர்ப்ராஸ் கானுடன் ஜோடி சேர்ந்தார். இதில் அபிஷேக் போரெல் தனது பங்குக்கு 20 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து அக்சர் படேல் களம் இறங்கினார். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சர்ப்ராஸ் கான் 30 ரன்னில் அவுட் ஆனார்.

இறுதியில் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி தரப்பில் அக்சர் படேல் 36 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி ஆட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்