இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 : வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோமன் பவெல் பேட்டிங்கை தேர்வு செய்தார்

Update: 2023-08-03 14:12 GMT

தரோபா,

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது. அடுத்ததாக இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. இதில் முதல் 3 ஆட்டங்கள் வெஸ்ட் இண்டீசிலும், கடைசி இரு ஆட்டங்கள் அமெரிக்காவிலும் நடைபெறுகிறது.

இதன்படி இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தரோபாவில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோமன் பவெல் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது

இந்திய அணியில் திலக் வர்மா , முகேஷ் குமார் அறிமுக வீரர்களாக விளையாடுகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்