'அகமதாபாத் மைதானத்தை முழுவதுமாக மூடும் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்' - பெங்கால் கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தல்

மைதானத்தை முழுவதுமாக மூடுவதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என பெங்கால் கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியுள்ளது.

Update: 2023-05-31 20:21 GMT

கொல்கத்தா,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் கடந்த 28-ந்தேதி நடைபெறுவதாக இருந்தது. அன்றைய தினம் மழை குறுக்கிட்டதால், போட்டி அடுத்த நாளுக்கு(29-ந்தேதி) தள்ளிவைக்கப்பட்டது.

இதன்படி கடந்த திங்கள்கிழமை ஐ.பி.எல். இறுதிப்போட்டி நடைபெற்றது. குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்து, சென்னை அணி பேட்டிங்கை தொடங்குவதற்கு முன்பாக மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. மைதான ஊழியர்கள் விரைந்து வந்து ஆடுகளத்தை தார்ப்பாய்கள் கொண்டு மூடுவதற்குள், பயிற்சி ஆடுகளம் மழையில் நனைந்துவிட்டது. இதன் காரணமாக மழை நின்ற பின்பும், போட்டியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டியுள்ள பெங்கால் கிரிக்கெட் வாரியம், கொல்கத்தா ஈடென் கார்டன் மைதானத்தில் உள்ளதைப் போல, மழை பெய்யும் சமயத்தில் மைதானத்தை முழுவதுமாக மூடுவதற்கான வசதிகளை அகமதாபாத் மைதானத்தில் ஏற்படுத்த வேண்டும் என்றும், இதனை 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பாக செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்