இந்தியா ஆசிய கோப்பையை வென்றாலும் பாகிஸ்தான் மீண்டும் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் நம்பர் 1 அணியாக வாய்ப்பு..!!
ஐசிசி ஒருநாள் தரவரிசையில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் உள்ளது.
துபாய்,
ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்திற்கு செல்ல பொன்னான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் வங்காளதேசத்திடம் தோற்றது. அந்த தோல்வி இந்திய அணியின் முதலிட வாய்ப்பை கெடுத்து விட்டது.
தற்போது, தரவரிசையில் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், பாகிஸ்தான் 2-வது இடத்திலும் தலா 115 புள்ளிகளுடன் உள்ளன. இந்தியா 114 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெறும் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலும் பாகிஸ்தான் அணி தரவரிசையில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேற முடியும். அது எவ்வாறெனில், இன்று நடைபெறும் ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தினால், ஆசிய கோப்பை 2023 இறுதிப்போட்டியின் முடிவைப் பொருட்படுத்தாமல் பாகிஸ்தான் முதலிடத்திற்கு முன்னேறும்.