'எனது பந்து வீச்சை டிராவிட் சரியாக ஆடியது கிடையாது' - இலங்கை முன்னாள் வீரர்

எனது பந்து வீச்சை டிராவிட் சரியாக ஆடியது கிடையாது என இலங்கை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கூறியுள்ளார்.

Update: 2023-09-06 01:46 GMT

மும்பை,

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 800 விக்கெட்டுகள் வீழ்த்திய ஒரே வீரரான இலங்கை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முரளிதரனின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து 800 என்ற பெயரில் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நேற்று நடந்தது.

இதில் கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் தெண்டுல்கர், ஜெயசூர்யா, முரளிதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் முரளிதரன் பேசுகையில்,

தெண்டுல்கர் எனது பந்து வீச்சை நன்றாக கணித்து செயல்பட்டார். அதனை பலரால் செய்ய முடியாது. பிரையன் லாரா எனக்கு எதிராக நன்றாக ஆடினார். ஆனால் பெரிய அளவில் எனது பந்து வீச்சை அடித்து நொறுக்கியதில்லை.

ராகுல் டிராவிட்டை போன்ற சிலரை நான் அறிவேன். அவர் உலகின் சிறந்த வீரர்களில் ஒருவர். ஆனால் அவர் ஒருபோதும் எனது பந்து வீச்சை துல்லியமாக கணித்து ஆடியது கிடையாது.

ஷேவாக், கவுதம் கம்பீர் ஆகியோர் எனது பந்து வீச்சை சிறப்பாக புரிந்து விளையாடினார்கள். எனது அணியில் கூட சிலர் எனது பந்து வீச்சை எப்படி ஆடுவது என்று தெரியாமல் திணறி இருக்கிறார்கள்' என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்