டி20யில் அதிக கேட்சுகள் பிடித்த விக்கெட் கீப்பர் எனும் சாதனை படைத்த தோனி.!

டி20 போட்டியில் அதிக கேட்ச்சுகளை பிடித்த விக்கெட் கீப்பர் என்னும் சாதனையை தோனி படைத்துள்ளார்.

Update: 2023-04-21 21:08 GMT

சென்னை,

ஐபிஎல்-லில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள்மோதின. இந்த போட்டியில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த இப்போட்டியில் சென்னை அணி கேப்டனும், விக்கெட் கீப்பருமாகிய டோனி, ஒரு கேட்சை பிடித்தார். அப்போது டி20 போட்டியில் அதிக கேட்சுகளை பிடித்த விக்கெட் கீப்பர் என்னும் சாதனையை தோனி படைத்துள்ளார்.

அவர் மொத்தம் 208 கேட்சுகள் பிடித்து முதல் இடத்தில் உள்ள நிலையில், 207 கேட்சுகள் பிடித்து தென் ஆப்பிரிக்காவின் குவிண்டன் டி காக் 2வது இடத்தில் உள்ளார்.

 

 

Tags:    

மேலும் செய்திகள்