ஐதராபாத் அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்..!
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது.
ஐதராபாத்,
16-வது ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் 34-வது லீக் ஆட்டத்தில் ஐடன் மார்க்ராம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதி வருகிறது.
இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் வார்னர் 21 ரன்கள் எடுத்து அவுட்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பில் சால்ட் 'டக்' அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். மிட்செல் மார்ஷ் 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் எல்.பி.டபிள்யூ ஆனார்.
பொறுப்பாக ஆடிய மணீஷ் பாண்டே மற்றும் அக்ஷர் படேல் தலா 34 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். இதையடுத்து 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது.
இந்த நிலையில் 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி பேட்டிங் செய்ய உள்ளது. ஐதராபாத் அணி சார்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். மேலும் புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகளும் நடராஜன் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.