ஆஷஸ் டெஸ்ட்: 3ம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸி. 4 விக்கெட் இழப்பிற்கு 113 ரன் சேர்ப்பு...!

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் சேர்த்துள்ளது.

Update: 2023-07-21 20:06 GMT

மான்செஸ்டர்,

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையே 5 டெஸ்ட் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 3 டெஸ்ட்கள் நிறைவடைந்த நிலையில் 2 போட்டிகளில் ஆஸ்திரேலியாவும், 1 போட்டியில் இங்கிலாந்தும் வெற்றிபெற்றுள்ளது.

இரு அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இதில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 317 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 592 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 25 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக குவாஜா, வார்னர் களமிறங்கினர். குவாஜா 18 ரன்னிலும், வார்னர் 28 ரன்னிலும் அவுட் ஆகினர்.

அடுத்து களமிறங்கிய லபுஷேன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஸ்மித் 17 ரன்னிலும், ஹெட் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் 3ம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்துள்ளது. லபுஷேன் 44 ரன்னிலும், மார்ஷ் 1 ரன்னிலும் களத்தில் உள்ளனர். 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 162 ரன்கள் பின் தங்கிய நிலையில் உள்ளது.   

Tags:    

மேலும் செய்திகள்