உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா - பாகிஸ்தான் போட்டியை பார்க்க குஜராத் செல்கிறார் ரஜினிகாந்த்

நாளை மறுநாள் அகமதாபாத்தில் நடைபெறவுள்ள இந்தியா - பாகிஸ்தான் போட்டியை நேரில் பார்க்க நடிகர் ரஜினிகாந்த் குஜராத் செல்கிறார்.

Update: 2023-10-12 09:48 GMT

சென்னை,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

இதுவரை இந்திய அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த தொடரின் முக்கிய போட்டியாக கருதப்படும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டிநாளை மறுநாள்  அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இப்போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன. போட்டி அன்று அகமதாபாத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிவார்கள். போட்டியை  காண பிரபலங்கள் வருகை தர உள்ளனர்.

இந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை நடிகர் ரஜினிகாந்த் நேரில் பார்க்க குஜராத் செல்கிறார். மேலும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் இந்தி நடிகர் வருண் தவான் ஆகியோர் நேரில் இப்போட்டியை கண்டுகளிக்க உள்ளனர் . இந்த போட்டியில் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளதால் அகமதாபாத் நகரில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். நாளைய போட்டி தொடங்கும் முன் இந்தி பாடகர் அர்ஜித் சிங்கின் இசை கச்சேரியும் நடைபெறும் என கூறப்படுகிறது

Tags:    

மேலும் செய்திகள்