நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர்; இங்கிலாந்து அணி அறிவிப்பு
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன்,
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் வரும் 30 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் போட்டிகளில் ஓய்வில் இருந்து திரும்பிய பென் ஸ்டோக்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளார். மேலும் இந்த தொடரில் சில புதுமுக வீரர்கள் அறிமுகம் ஆக உள்ளனர். வேகப்பந்து வீச்சாளராக உள்ளூர் போட்டிகளில் அசத்திய கஸ் அட்கின்சன் இரண்டு வடிவிலான போட்டிகளுக்கான அணிகளில் இடம் பெற்றுள்ளார். ஜான் டர்னர் மற்றும் ஜோஷ் டங் டி20 போட்டிகளுக்கான அணியில் இடம் பெற்றுள்ளனர்.
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான அணி பின்வருமாறு;-
ஒருநாள் அணி: ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயீன் அலி, கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோவ், சாம் கர்ரன், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மலான், அடில் ரஷித், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி, மார்க் வூட், கிறிஸ் வோக்ஸ்
டி20 அணி: ஜோஸ் பட்லர் (கேப்டன்), ரெஹான் அகமது, மொயீன் அலி, கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோவ், ஹாரி புரூக், சாம் கர்ரன், பென் டக்கெட், வில் ஜாக்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மலான், அடில் ரஷித், ஜோஷ் டங்க், ஜான் டர்னர், லூக் டபிள்யூ.